தண்ணி இல்லாம மீன் வாழுமா.. மன்னிச்சுடுங்க தீதி! – திரிணாமூலுக்கு ஜம்ப் அடிக்கும் பாஜக பிரமுகர்!

Webdunia
ஞாயிறு, 23 மே 2021 (11:02 IST)
திரிணாமூல் காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு சென்ற பெண் வேட்பாளர் ஒருவர் மீண்டும் தி.காங்கிரஸில் இணைய மம்தாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக – திரிணாமூல் காங்கிரஸ் இடையே பலத்த மோதல் நிலவியது. இந்நிலையில் தேர்தல் சமயத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் பலர் பாஜகவுக்கு தாவியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும் அதிகமான வாக்குகளை பெற்று திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

அவ்வாறாக மேற்கு வங்க தேர்தலில் சீட் தராத காரணத்தால் திரிணாமூல் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தவர் சோனாலி குஹா. தற்போது மீண்டும் பாஜகவிலிருந்து திரிணாமூல் காங்கிரஸுக்கு செல்ல விரும்பும் சோனாலி, மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் “ஒரு மீன் தண்ணீருக்கு வெளியே வாழ முடியாது. தீதி நீங்கள் என்னை மன்னிக்காவிட்டால் நான் வாழ முடியாது” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்