மேற்கு வங்க வன்முறை; 6 பேர் பலி? – மம்தாவுக்கு உள்துறை அமைச்சகம் கிடுக்குப்பிடி!

செவ்வாய், 4 மே 2021 (08:58 IST)
மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிவை தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில் 6 பேர் பலியானதாக வெளியாகியுள்ள செய்தி குறித்து உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது.

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் – பாஜக இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றியடைந்து ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் திரிணாமூல் காங்கிரஸை சேர்ந்தவர்கள் பாஜக அலுவலகம், பாஜக தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், இந்த வன்முறை சம்பவங்களில் 6 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில் மேற்கு வங்க வன்முறை மற்றும் கொலை சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்