மத்திய பட்ஜெட் 2021 எதிரொலி: 1600 புள்ளிகள் அதிகரித்த சென்செக்ஸ்

Webdunia
திங்கள், 1 பிப்ரவரி 2021 (13:06 IST)
மத்திய பட்ஜெட் 2021 எதிரொலி: 1600 புள்ளிகள் அதிகரித்த சென்செக்ஸ்
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை சரியாக 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் 2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில் இந்த பட்ஜெட்டில் அதிரடியாக பல்வேறு அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது
 
குறிப்பாக தமிழகம் கேரளா மேற்கு வங்கம் ஆகிய தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு கூடுதல் சலுகைகள் அறிவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. திருக்குறளை வாசித்து பட்ஜெட் உரையை தொடங்கிய நிர்மலா சீதாராமன் அவர்கள் சுமார் 2 மணி நேரம் பட்ஜெட்டை வாசித்து சற்றுமுன் பட்ஜெட் வாசிப்பை முடித்தார்.
 
இந்த நிலையில் பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய பங்குச் சந்தை இன்று 1600 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்துள்ளது. சற்று முன் வரை சென்செக்ஸ் 1600 புள்ளிகள் அதிகரித்து 47 ஆயிரத்து 865 என்று வர்த்தகமாகி வருகிறது. அதே போல் நிப்டி 457 புள்ளிகள் அதிகரித்து 16 ஆயிரத்து 92 என விற்பனையாகி வருகிறது 
 
கடந்த சில நாட்களாக பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்த நிலையில் இன்று பட்ஜெட் காரணமாக அதிகரித்திருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்