கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் – வீடுகளை காலி செய்ய சொல்கிறார்களா உரிமையாளர்கள் ?

Webdunia
புதன், 25 மார்ச் 2020 (08:37 IST)
கொரோனா வைரஸுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பணியாளர்களின் வீட்டு உரிமையாளர்கள் வீடுகளை காலி செய்ய சொல்வதாக புகார்கள் எழுந்துள்ளன.

உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,00,000 ஐ தாண்டியுள்ளது. அதே போல  வைரஸ் தாக்குதலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 18,000 ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 536 ஆக உள்ளது. வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் 21 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு இரவு பகலாக அரசு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்களுக்க் நாடே பாராட்டு தெரிவித்து வருகிறது. ஆனால் அவர்களுக்கான சிக்கல் வேறு ரூபத்தில் வந்துள்ளது. வாடகை வீடுகளில் தங்கியிருக்கும் எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை வீட்டு உரிமையாளர்கள் காலி செய்ய சொல்வதாகவும் பலரைக் கட்டாயமாக வெளியேற்றுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

இது சம்மந்தமான எய்ம்ஸ் மருத்துவர்கள் சங்கம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதி தங்கள் குறையை வெளிப்படுத்த, அவ்வாறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் டெல்லி மாநகர காவல் ஆணையாளருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்