பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Webdunia
சனி, 27 ஏப்ரல் 2019 (15:04 IST)
நாட்டில் தற்போது மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா நடைபெற்று வருகிறது. சில மாநிலங்களில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளன. 
இந்நிலையில் நரேந்திர மோடி நாடாளுமன்ற தேர்தலில் வாரணாசி தொகுதிய்ல் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை நேற்று அவர் அந்த தொகுதியின் தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தார்.
 
மோடி தாக்கல் செய்த பிரணாமப் பத்திரத்தில் உள்ள விவரங்கள் :
 
மோடி கடந்த 1967 ஆம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி  தேர்வை குஜராத் கல்வி வாரியத்தில் தேர்ச்சி பெற்றார். 1978 ல் டெல்லி பல்கலைக்கழகத்தில் கலைப்பாட பிரிவில் பட்டம் பெற்றார். 1983 ஆம் ஆண்டு குஜராத் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றுள்ளார்.
 
தனது மனைவி பெயர் யசோதா என்று கூறியுள்ளார். கடந்த லோக்சபா தேர்தலில் போது தாக்கல் செய்த மனுவில் சொத்துமதிப்பாக 1 கோடியே 65 லட்சம் என்று குறிப்பிட்டிருந்தார்.
தற்போது இச்சொத்துக்களின் மதிப்பு  இரண்டரைக் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது, மேலும் மோடிக்கு எதிரான கிரிமினல் வழக்குகளோ, கடன் பாக்கிகளோ இல்லை என்று அதில் தெரிவித்திருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்