வாரணாசி பாஜக பேரணியில் ஓபிஎஸ்: தேசிய அரசியலுக்கு செல்கிறாரா?

வெள்ளி, 26 ஏப்ரல் 2019 (06:55 IST)
வாரணாசியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற மாபெரும் பேரணியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார். மேலும் இன்று பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கலின் போதும் ஓ.பன்னீர்செல்வம் உடன் இருப்பார் என்று தகவல் வெளிவந்துள்ளது. இதனையடுத்து ஓபிஎஸ் தேசிய அரசியலுக்கு செல்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது
 
துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரகுமார் தேனி தொகுதியில் மக்களவை தேர்தலில் போட்டியிட்டுள்ள நிலையில் அவர் வெற்றி பெற்று, பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய அமைச்சர் பதவி கேட்கவும் ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளாராம். மேலும் தமிழக அரசியலில் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் அதிகளவில் இடம்பெற்று வருவதால் வரும் காலத்தில் மகனுடன் இணைந்து ஓபிஎஸ் அவர்களும் தேசிய அரசியலுக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அனேகமாக அவர் விரைவில் மாநிலங்களவை உறுப்பினராகவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
அந்த வகையில் தன்னை தேசிய அரசியலுக்கு தயார் செய்து கொள்ளவே அவர் தற்போது பாஜக பேரணியில் கலந்து கொள்வதோடு, பிரதமர் வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது. ஜல்லிக்கட்டு பிரச்சனையின்போது இரண்டு நாட்கள் டெல்லியில் தங்கியிருந்து மத்திய அமைச்சர்களையும், அதிகாரிகளையும் சந்தித்த அவரது அணுகுமுறை டெல்லியை கவர்ந்து என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்