மார்ச் மாதத்தில் மட்டுமே ரூ.128.64 கோடி வசூல்: தேவஸ்தானம் தகவல்!

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2022 (16:04 IST)
கடந்த மார்ச் மாதத்தில், 19.72 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை  தரிசனம் செய்தனர் என தேவஸ்தானம் தகவல் வெளியிட்டுள்ளது. 

 
ஏழுமலையானை தரிசிக்க ஒவ்வொரு மாதமும் இலவச தரிசன டிக்கெட்டுகள் மற்றும் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழங்கப்பட்டு வருகின்றன. ந்த நிலையில் ஏப்ரல் மே மற்றும் ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுக்கள் https://tirupatibalaji.ap.gov.in/#/login என்ற இணையதளத்தில் குறிப்பிட்ட தேதிகளில் கிடைக்கும்.
 
பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கக் கூடிய பக்தர்களின் எண்ணிக்கையை தேவஸ்தானம் கடந்த ஒரு மாதங்களாக அதிகரித்துள்ளது.இதன் காரணமாக தினந்தோறும் தற்போது 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்கள் வரை சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். 
 
அதன்படி கடந்த மார்ச் மாதத்தில், 19.72 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை  தரிசனம் செய்தனர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக ரூ.128.64 கோடி செலுத்தி உள்ளனர். 9.54 லட்சம் பக்தர்கள் மொட்டை அடித்து தலை முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். 24.10 லட்சம் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் அன்னபிரசாதம் வழங்கப்பட்டுள்ளது என தேவஸ்தானம் தகவல் வெளியிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்