திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதிலிருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனத்திற்காக செல்கின்றனர். உள்நாட்டு மக்கள் மட்டுமல்லாமல் சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகளும் திருப்பதிக்கு அதிக அளவில் செல்கின்றனர். காணிக்கை உண்டியலில் வெளிநாட்டினர் தங்கள் நாட்டு நாணயங்களை காணிக்கையாக செலுத்துகின்றனர்.
அப்படியாக திருப்பதி உண்டியலில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளின் நாணயங்கள் அதிக அளவில் சேர்ந்துள்ளன. இவற்றை இந்திய பணமாக மாற்ற முயற்சித்தும் தேவஸ்தானத்தால் முடியவில்லை. இதனால் டன் கணக்கில் சேர்ந்துள்ள வெளிநாட்டு நாணயங்களை மின்னணு முறையில் ஏலம் விட தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இந்த ஏலம் ஏப்ரல் 18 தொடங்கி 21வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.