தேவகவுடா கை காட்டுபவரே முதல்வர்: 33 தொகுதிகளில் முன்னிலை பெற்று அபாரம்

Webdunia
செவ்வாய், 15 மே 2018 (09:39 IST)
கர்நாடக சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டு கட்சிகளுமே தனி மெஜாரிட்டி பெற வாய்ப்பில்லை என்றே தேர்தல் முடிவுகள் காட்டுகிறது
 
இதுவரை வெளியான 207 தொகுதிகளின் முன்னிலை நிலவரப்படி பாஜக 93 தொகுதிகளிலும், பாஜக 81 இடங்களிலும் தேவகவுடாவின் மஜத கட்சி 33 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. எனவே தேவகவுடாவின் ஆதரவை பெறும் கட்சியே ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கே மஜத கட்சி ஆதரவு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் துணை முதல்வர் மற்றும் முக்கிய அமைச்சகங்களை அவர் எதிர்பார்ப்பார் என்ற கருத்தும் நிலவி வருகிறது.
 
எனவே இனி நடக்கப்போகும் குதிரை பேரங்களை பொறுத்திருந்து பார்ப்போம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்