முதல்வர் சித்தராமையா: ஒரு தொகுதியில் முன்னிலை, ஒரு தொகுதியில் பின்னடைவு

Webdunia
செவ்வாய், 15 மே 2018 (09:22 IST)
கர்நாடக முதல்வர் சித்தராமையா சட்டமன்ற தேர்தலில் சாமுண்டேஷ்வரி மற்றும் பதாமி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் அவர் ஒரு தொகுதியில் முன்னிலையும், ஒரு தொகுதியில் பின்னடைவிலும் உள்ளார்.
 
சாமுண்டேஷ்வரி தொகுதியில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை விட 11 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் ஜி.டி.தேவகவுடா முன்னிலை பெற்றுள்ளார்.
 
அதேபோல் பதாமி தொகுதியில் பாஜக மற்றும் மஜத கட்சிகளின் வேட்பாளர்களை விட சித்தராமையா 1500 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார். இருப்பினும் முன்னிலை வித்தியாசம் குறைவாக இருப்பதால் இந்த தொகுதியின் வெற்றி யாருக்குக் என்பது கணிக்க முடியாத அளவில் இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
 
இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி மொத்தமுள்ள 189 தொகுதிகளில் பாஜக 85 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், மஜத கட்சி 26 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன,.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்