முதல்வர் அதிஷி போலி விரைவில் கைது செய்யப்படுவார்: அரவிந்த் கெஜ்ரிவால் அதிர்ச்சி தகவல்..!

Mahendran
புதன், 25 டிசம்பர் 2024 (16:26 IST)
போலி வழக்கில் டெல்லி முதல்வர் அதிஷி விரைவில் கைது செய்யப்படுவார் என ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் இன்று நிருபர்களை சந்தித்து, அரவிந்த் கெஜ்ரிவால், "எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும், நீதிதான் இறுதியில் வெல்லும். ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் பொய் வழக்கில் கைது செய்யப்படுவார்கள். இதற்காக அவர்கள் ஒரு போலி வழக்கை தயார் செய்து வருகிறார்கள் என்பதை அறிந்து உள்ளோம்," என்று கூறினார்.

மேலும், "பெண்களுக்கு இலவச பேருந்து திட்டத்தை தொடர்ந்து செய்வோம். நான் உயிருடன் இருக்கும் வரை பெண்களுக்கான இலவச பேருந்து பயணத்தை நிறுத்தப்படாது," என்றும் கூறினார்.

அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரி ஆகிய துறைகளுக்கு அதிஷியை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும், கட்சியின் முக்கிய தலைவர்கள் வீட்டில் சோதனை நடத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து உள்ளதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

ஏற்கனவே டெல்லி முதல்வராக இருந்த கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு பல மாதங்கள் சிறையில் இருந்த நிலையில், தற்போது அதிஷியும் கைது செய்யப்படுவார் என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்