காவல் நிலையத்தில் பாட்டு பாடி மனைவியை கவிழ்த்த கணவர் - வைரல் வீடியோ

Webdunia
புதன், 15 நவம்பர் 2017 (15:10 IST)
சண்டை காரணமாக காவல் நிலையத்தில் புகார் அளித்த மனைவியை, கணவன் பாட்டு பாடி சமாதானம் செய்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.


 

 
உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தை சேர்ந்த இளம் தம்பதியினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களிடையே வாக்குவாதம் முற்றி அது மோதலாக மாறியுள்ளது. இதனால் கடந்த 2 மாதங்களாக இருவரும் பிரிந்திருந்தனர். அந்நிலையில் அந்த பெண் தன் கணவன் மீது அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 
 
இந்த புகாரை அடுத்து அந்த தம்பதியினரை காவல் ஆய்வாளர் விசாரணைக்கு அழைந்திருந்தார். விசாரணைக்கு தம்பதிகள் தனித்தனியே ஆஜராயினர். அப்போது திடீரென,  அந்த நபர் அவரது மனைவிக்கு பிடித்தமான `நா சீக்ஹா ஜினா டெரி பினா”  பாடலை பாடினார். அந்த பாடலுக்கு ‘உன்னை விட்டு பிரிந்து வாழ நான் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை’ என்று அர்த்தமாம்.  
 
இதைக் கேட்டதும், அந்த பெண் அவரது கணவர் தோளில் சாய்ந்துக்கொண்டு சமாதனம் அடைந்தார். அதையடுத்து இவருடையே சண்டை காணாமல் போனது. காவல்துறையினர் இருவருக்கும் அறிவுரை வழங்கி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
 
இந்த சம்பவத்தை அங்கிருந்த காவல் அதிகாரி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ய, தற்போது அந்த வீடியோ வைரல் ஆகியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்