ஊழல்வாதிகள் என்னை மிரட்டுவதோடு, அவதூறும் செய்கின்றனர்- பிரதமர் மோடி

sinoj
செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (15:12 IST)
பிரதமர் மோடி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில், ஊழல் வாதிகள் என்னை மிரட்டுவதுடன் அவதூறும் செய்து வருகின்றனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்றும் பதிவான வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தமிழ் நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது என்று   தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்   அறிவித்தார். 
 
அதன்படி தேர்தல் விதிகள்  நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது. 
 
நாடு முழுவதும்  பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, நாம் தமிழர்  உள்ளிட்ட அனைத்து கட்சிகளும்  தீவிர  பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்
 
இந்த நிலையில்,   பிரதமர் மோடி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில், ஊழல் வாதிகள் என்னை மிரட்டுவதுடன் அவதூறும் செய்து வருகின்றனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது;
 
’’எனது 3 வது ஆட்சிக் காலத்தில் ஊழல்வாதிகள் மீது இன்னும் வலுவான தாக்குதல் நடக்கும்.
 
ஊழல் செய்தவர்கள் சிறைக்குச் செல்ல வேண்டாமா? ஊழல் வாதிகள் என்னை மிரட்டுவதுடன் அவதூறும் செய்து வருகின்றனர்.
 
கேளிக்கைகளில் ஈடுபடுவதற்காக மோடி பிறக்கவில்லை. மக்களுக்குப் பணியாற்றவே பிறந்துள்ளேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்