ஸ்விக்கி நிறுவனம், ஒவ்வொரு ஆர்டருக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை பிளாட்பார்ம் கட்டணமாக வசூலித்து வருகிறது. இந்த தொகை முதலில் ரூ. 5 ஆக இருந்த நிலையில் படிப்படியாக உயர்த்தப்பட்டு ரூ.12ஆக அதிகரித்தது. இந்த நிலையில் தற்போது மேலும் ரூ.2 அதிகரித்து பிளாட்பார்ம் கட்டணம் ரூ.14 என அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வு குறித்து ஸ்விக்கி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கத்தையும் வெளியிடவில்லை. இருப்பினும், இந்த கட்டண உயர்வு, பல வாடிக்கையாளர்களை மாற்றுத்தளங்களுக்குச் செல்ல தூண்டக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.