அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்த போது அவர் ஆவேசமாக பிரதமரை அட்டாக் செய்தார். பிரதமர் மோடிக்கு தான் சவால் விடுவதாகவும் அடுத்த 18 நாட்கள் அவர் தமிழகத்திற்கு எத்தனை முறை வந்தாலும் ஒரு தொகுதியில் கூட பாஜகவால் டெபாசிட் வாங்க முடியாது என்றும் தமிழ்நாட்டு மக்கள் அதை செய்வார்கள் என்றும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும் பாஜகவுக்கு நீங்கள் பாடம் கற்பிக்க வேண்டும் என்றும் மத்திய பாஜக அரசு ஊழல் அரசாக செயல்பட்டு வருகிறது என்றும் கடந்த 10 ஆண்டுகால மத்திய பாஜகவின் ஆட்சி மக்களுக்கான ஆட்சி இல்லை நண்பர்களுக்கான மோடியின் நண்பர்களுக்கான ஆட்சி என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆவேசமாக பிரச்சாரம் செய்தார்.
மேலும் கடந்த பத்து ஆண்டுகளில் பா.ஜ.க அரசு ஒரு பொதுத்துறை நிறுவனத்தைக்கூட ஆரம்பிக்கவில்லை. ஆனால் அரசு துறைகள் அனைத்தையும் தனியார் துறைகளுக்கு, கொடுத்துவிட்டது என்று கூறிய அமைச்சர் உதயநிதி, அதானி விமான நிலையம், அதானி விமான சேவை, அதானி ரயில்வே நிலையம், அதானி துறைமுகம், அதானி அரங்கம், அதானி மின் துறை, அதானி தண்ணீர் என எல்லாம் அதானி மயமாகிவிட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.