கொரோனா :கர்நாடகாவில் 258 பேர் பாதிப்பு : 9 பேர் பலி

Webdunia
செவ்வாய், 14 ஏப்ரல் 2020 (15:21 IST)
சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.  இந்நிலையில் உலக அளவில் இதுவரை, 19, 20,918 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்,453289 பேர் குணமடைந்துள்ளனர். சுமார் 119686 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாலில் , இதுவரை 10,363 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1036 பேர் குணமடைந்துள்ள நிலையில், 339 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து இன்றுடன் 21 நாள் முடிவடையொட்டி, இன்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி,வரும் மே 3 ஆம் தேதிவரை ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில், கர்நாடகாவில் மேலும் ஒருவர் கொரோனாவா  பலியானார்.

கர்நாடக மாநிலம் விஜயபுரா பகுதியைச் சேர்ந்த 69 வயது முதியவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

இதையடுத்து, மாநிலத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.  இதுவரை 258 பேருக்கு அங்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்