பிரதமர் மோடி நாளை காலை 10 மணிக்கு மக்களுக்கு உரை !

திங்கள், 13 ஏப்ரல் 2020 (14:37 IST)
சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.  இந்தியாவில் கொரோனாவைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளது வரும் நிலையில், வரும் 30 ஆம் தேதி வரை சில மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்திவருகின்றன.

இந்நிலையில், இந்தியாவில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9240 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 331 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், நாளை ( 14 ஏப்ரல் 0 காலை 10 மணிக்கு  பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாக, அவர், தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அநேகமாக, சமீபத்தில் நடைபெற்ற மாநில முதல்வர்களுடான காணொளி ஆலோசனைக் கூட்டத்தில், ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமென கேட்டுகொண்டதாக தகவல் வெளியானநிலையில், பிரதமர் நாளை, ஊரடங்கை வரும் 30 ஆம் தேதி நீட்டிப்பது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்