மீண்டும் பரவும் கொரொனா வைரஸ்...சுகாதாரத்துறை எச்சரிக்கை

Webdunia
வெள்ளி, 9 ஜூலை 2021 (19:10 IST)
இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த நிலையில்  இரண்டு வாரங்களாகக் குறைந்து வருகிறது.
 

அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

அனைத்து மாநிலங்களிலும்  45  வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் கூறியபடி 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கொரொனா  3 வது அலை பரவும் அபாயமுள்ளதால் இதுகுறித்து மருத்துவ நிபுணர்களும்,  விஞ்ஞானிகளும் எச்சரித்துள்ளனர்.
கொரொனாவுக்கு எதிரான தடுப்பூசி போடாதவர்களும் தற்போது தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் கொரொனா மீண்டும் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.  அதில், இரண்டிற்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரொனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் தமிழகம் இடம்பிடித்துள்ளது. அதேபோல், வடகிழக்கு மாநிலங்கள், கேரளா,மகாராஷ்டிராவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்