வெற்றி உறுதியானாலும் ஒன்றாக கூட வேண்டாம் - தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்!
வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (14:52 IST)
கொரோனா தொற்று இரண்டாம் அலை அதிவேகமாக பரவி உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் திமுக தலைவர் முக ஸ்டாலின் தொண்டர்கள் பாதுகாப்பு கருதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வருகிற மே இரண்டாம் தேதி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளது. இந்த பெருந்தொற்று காலத்தில் கட்சியினர் யாரும் வெளியில் வராமல் ஊடங்கங்கள் மூலமாக வீட்டில் இருந்தே முடிவுகளை தெரிந்துகொள்ளுங்கள் என கூறியுள்ளார்.
மேலும், கொரோனாவால் தமிழகம் தவித்து வரும் நிலையில் பெருந்தொற்றிற்கு தொண்டர்கள் ஆளாகிவிட வேண்டாம் என கேட்டுக்கொண்ட அவர் வெற்றி உறுதியானாலும் கட்சியினர் தேவையின்றி ஒன்றாக கூட வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.