33 ஆயிரத்தை தாண்டிய கொரோனா! – நீட்டிக்கப்படுமா ஊரடங்கு?

Webdunia
வியாழன், 30 ஏப்ரல் 2020 (08:46 IST)
இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளபோதும் பாதிப்பு எண்ணிக்கை 33ஆயிரத்தை கடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 31,787 லிருந்து 33,050 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 1008 லிருந்து 1074 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 7797 லிருந்து 8325 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 9,915 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் 4,082 பேரும், டெல்லியில் 3,439 பேரும், ராஜஸ்தானில் 2,438 பேரும், மத்திய பிரதேசத்தில் 2,561 பேரும், தமிழகத்தில் 2,162 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு இன்னும் சில நாட்களில் முடிய உள்ள நிலையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களுக்கு மட்டுமாவது ஊரடங்கு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்