இந்தியாவில் தடுப்பூசி விலை 600 ரூபாய்… மற்ற நாடுகளில் எவ்வளவு தெரியுமா?

Webdunia
சனி, 24 ஏப்ரல் 2021 (15:09 IST)
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி வெவ்வேறு விலைகளில் விற்கப்படும் நிலையில் மற்ற சில நாடுகளின் விலையும் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் மருந்து தயாரிப்பில் ஈடுபட்டு வரும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை மத்திய அரசுக்கு 150 ரூ, மாநில அரசுக்கு 400 ரூ மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய் என விலையேற்றம் செய்துகொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை எதிர்கட்சி தலைவர்கள் பலரும் கண்டித்துள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவைப் போலவே சில நாடுகளில் கொரோனா தடுப்பூசிகளின் விலை இணையத்தில் வெளியாகியுள்ளது. அவற்றில் எல்லா நாடுகளும் இந்தியாவை விட கம்மியான விலையிலேயே கொடுக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றில் சில நாடுகளின் விலைப் பட்டியல்.

இந்தியா : ரூ600
சவுதி அரேபியா: ரூ395
தென் ஆப்ரிக்கா: ரூ395
வட அமெரிக்கா: ரூ300
பாங்கிளாதேஷ்: ரூ300
ப்ரேசில்: ரூ237
பிரிட்டன்: ரூ226
ஐரோப்பிய யூனியன்: ரூ162-263 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்