இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் தினசரி பாதிப்புகள் 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் நாட்டில் பல்வேறு மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதிகள் குறைவு ஆகிய பிரச்சினைகளும் உள்ளன.
இந்நிலையில் டெல்லிக்கு ஆக்ஸிஜன் அவசிய தேவை குறித்து டெல்லி அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. இந்த வழக்கில் பதிலளித்துள்ள மத்திய அரசு ”இந்தியாவில் வரும் வாரங்களில் கொரோனாவின் கோர பாதிப்பை எதிர்கொள்ள உள்ளோம். இதை மக்களை அச்சப்படுத்துவதற்காக கூறவில்லை. ஆனால் கொரோனா பரவலை எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளது.