வேகமாக குறையும் பாதிப்புகள், பலி எண்ணிக்கை! – இன்றைய கொரோனா நிலவரம்!

Webdunia
திங்கள், 12 செப்டம்பர் 2022 (10:05 IST)
கடந்த சில நாட்களாக இந்தியாவில் 10 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் தற்போது வேகமாக குறைய தொடங்கியுள்ளன.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான தினசரி பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில் தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 5,521 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,45,00,580 ஆக உயர்ந்துள்ளது.

ALSO READ: வாரத்தின் முதல் நாளில் மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை: மீண்டும் 60 ஆயிரத்திற்கும் மேல் சென்ற சென்செக்ஸ்!

ஒரே நாளில் 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5,28,165 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,39,25,239 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 47,176 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்