6 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்: மத்திய அரசு

Webdunia
வெள்ளி, 30 டிசம்பர் 2022 (11:48 IST)
கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து ஆறு நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது 
 
சீனா ஜப்பான் ஹாங்காங் சிங்கப்பூர் தென்கொரியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருபவர்களுக்கு ஜனவரி 1 முதல் கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் வரவேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
 
மேலும் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் அனைவரும் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்