சீனாவில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா.. இந்திய மருந்துகள் அமோக விற்பனை!

வியாழன், 29 டிசம்பர் 2022 (18:58 IST)
சீனாவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள இந்திய மருந்துகளை சீனர்கள் வாங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
சீனாவில் தினமும் 10 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும் 5000 வரை உயிரிழப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இந்த நிலையில் சீனாவில் கொரோனா மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளை வாங்குவதற்கு சீனர்கள் போட்டி போட்டு வருவதாக கூறப்படுகிறது.
 
 இந்தியாவிலிருந்து மலிவான விலையில் கொரோனா வைரஸ் மருந்துகள் கிடைப்பதாகவும் அதை வாங்கவே பெரும்பாலான சீனர்கள் விரும்புவதாகவும் சீனாவின் முன்னணி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 
 
இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா மருந்துகளை சீன அரசு அங்கீகரிக்கவில்லை என்றாலும் இந்திய மருந்து வாங்குவது தண்டனைக்குரிய குற்றம் என்று சீன அரசு தெரிவித்த போதிலும் இந்திய மருந்தை தான் சீனர்கள் வளர் வாங்கி வருவதாக கூறப்படுகிறது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்