25 லட்சத்தை தாண்டியது கொரோனா! – தாக்குபிடிக்குமா இந்தியா?

Webdunia
சனி, 15 ஆகஸ்ட் 2020 (10:46 IST)
இந்திய சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்தியாவின் கொரோனா பாதிப்பு 25 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடந்த சில மாதங்களாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 65,002 புதிய கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதனால் ஒட்டு மொத்தமாக பாதிப்பு எண்ணிக்கை 25,26,192 ஆக உள்ளது. கடந்த 24 மனி நேரத்திற்குள்ளாக 996 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலி எண்ணிக்கை 49,036 ஆக உயர்ந்துள்ளது. 18,08,936 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 6,61,595 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அவை புழக்கத்திற்கு வரும் வரை இந்தியாவில் நோய் கட்டுப்பாட்டிற்குள் இருந்து விட்டால் தடுப்பூசிகள் பயன்பாட்டின் போது மேலும் கட்டுப்படுத்த முடியும் என மருத்துவ நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்