நாளுக்கு நாள் மோசமடையும் இந்தியா - 95 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

Webdunia
வியாழன், 3 டிசம்பர் 2020 (09:29 IST)
உலக நாடுகள் முழுவதும் கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்ற நாடுகளை விட வேகமாக குணமாகி வருகிறது.
 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது. 
 
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 35,551 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 95,34,964 ஆக உள்ளது. 24 மணி நேரத்தில் 526 பேர் புதிதாக உயிரிழந்துள்ளதால் மொத்த எண்ணிக்கை 1,38,648 ஆக உள்ளது. 
 
மேலும், 24 மணி நேரத்தில் 40,726 பேர் குணமடைந்துள்ளதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 89,73,373 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்