நாள் ஒன்றிற்கு 13,383 பேருக்கு கொரோனா - கேரள நிலவரம்!!

Webdunia
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (09:40 IST)
கேரளாவில் கொரோனாவின் 2வது அலையின் பாதிப்புகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. நாள் ஒன்றிற்கு 13,383 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
 
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 25,467 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதில் கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,383 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
கேரளாவில் கொரோனாவின் 2வது அலையின் பாதிப்புகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. கேரளாவில் கொரோனா தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38,27,688 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 90 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 19,584 ஆக உயர்ந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்