இந்தியாவில் கொரோனா 3வது அலை தாக்கம் எப்படி இருக்கும்?

செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (09:14 IST)
இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையில் கொரோனா தினசரி பாதிப்பு எப்படி இருக்கும் என நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ளது. 
 
இந்தியாவில் கொரோனாவின் இரண்டு அலை தாக்ககியதில் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மூன்றாம் அலை தாக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கப்பட்டு வருகிறது.
 
ஆம், தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு, அக்டோபரில் இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை உச்சமடையும் எனவும் மூன்றாம் அலை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.  
 
இந்நிலையில் மூன்றாம் அலையின் போது இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு உச்சத்தின் போது ஒரு  லட்சத்துக்கு குறைவாக தொற்றுகளே பதிவாகும். இதுவே மிகவும் மோசமான நிலையில், அதிகபட்சமாக தினசர பாதிப்பு ஒன்றரை லட்சமாக பதிவாகக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
 
அதோடு, மூன்றாவது அலையில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கையில் கேரளா மற்றும் மகாராஷ்டிரா முக்கிய பங்கு வகிக்கும் என்றும் குறைவான அளவிலே இந்தியர்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளன என்றும் நிபுணர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்