டிசம்பர் & ஜனவரி கொரோனா ரெட்டிப்பாடும்: ஆய்வில் எச்சரிக்கை!

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2020 (11:32 IST)
மேலும் டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய மாதங்கள் கொரோனா வைரஸ் பரவலுக்கு உகந்த சூழ்நிலையாக இருக்கிறது என தகவல்.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது. 
 
கடந்த 24 மணி நேரத்தில் 37,975 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 91,77,840 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 480 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  1,34,218 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 86,04,955 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 4,38,667 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இந்நிலையில், தேசிய அளவில் கொரோனா குறைந்த நிலையில் டெல்லி, அரியானா, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் வைரஸ் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. மேலும் டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய மாதங்களில் கடும் குளிர் இருக்கும். இது வைரஸ் பரவலுக்கு உகந்த சூழ்நிலையாக இருக்கிறது. மேலும் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் 2வது அலை அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்