ட்ரம்ப்பை சந்திக்க சான்ஸ் இல்லை; நிகழ்ச்சிகளை புறக்கணித்த காங்கிரஸ்!

Webdunia
செவ்வாய், 25 பிப்ரவரி 2020 (09:45 IST)
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்திக்க எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்காததால் விருந்து நிகழ்ச்சியை புறக்கணித்துள்ளது காங்கிரஸ்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டு நாள் சுற்றுபயணமாக நேற்று இந்தியா வந்தார். அகமதாபாத்தில் அவரை வரவேற்ற பிரதமர் மோடி அவரோடு காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்கு சென்றார். பிறகு இருவரும் ’நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இரண்டாவது நாளான இன்று குடியரசு தலைவர் மாளிகையில் அதிபர் ட்ரம்ப்க்கு விருந்து அளிக்கப்படுகிறது. இந்த விருந்துக்கு பல அரசியல் பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

முதலில் விருந்தில் கலந்து கொள்வதாக கூறியிருந்த மன்மோகன் சிங் திடீரென தான் பங்கேற்க முடியாத சூழலில் உள்ளதாக குடியர்சு தலைவருக்கு தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் அதிபர் ட்ரம்ப்பை சந்தித்து பேச மத்திய அரசு நேரம் வழங்காததால் விருந்தில் கலந்துகொள்ள போவதில்லை என ஆதிர் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்