அமெரிக்க அதிபர் டிரம்புக்கான பாதுகாப்புக் குழுவில் இருந்த குரங்குகள் !

திங்கள், 24 பிப்ரவரி 2020 (19:26 IST)
Monkeys on the Security Council for US President Trump!

இன்று (24 ஆம் தேதி) குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு தனது குடும்பத்தினருடன் விமானத்தில் வந்திறங்கிய அதிபர் டிரம்ப், அங்குள்ள பட்டேல் மைதானத்தில் நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில், டிரம்புக்கான பாதுக்காப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
 
அங்கு லட்சக்கணக்கான மக்கள் குழுமியுள்ள நிலையில், முதலில் பிரதமர் மோடி பேசினார். அதன்பிறகு டிரம்ப் பேச ஆரம்பித்தார்.
 
அதில், இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நட்பு நாடாக அமெரிக்கா விளங்கும். இந்தியர்களின் ஒற்றுமை உலகத்திற்கே எடுத்துக்காட்டாய் விளங்குகிறது என தெரிவித்தார். மேலும், இந்தியாவின் வளர்ச்சிக்கு நவீன ஆயுதங்கள் வழங்க தயாராக உள்ளோம்.
 
சிறப்பு வரவேற்பளித்த நண்பர் மோடிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மோடி குஜராத்தின் பெருமை மட்டுமல்ல , கடின உழைப்பு பக்திக்கு வாழும் உதாரணம் மோடி என தெரிவித்தார்.
 
அதன்பிறகு டிரம்ப் தனது குடும்பத்தினருடன் உத்திரபிரதேசம் மாநிலம் ஆக்ரா நதிக்கரையில் உள்ள தாஜ்மஹாலைப் பார்க்க செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது, டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் அங்குச் சென்றுள்ளனர்.
 
இந்நிலையில், மாலை 5-15 மணிக்கு தாஸ்மஹாலுக்கு சென்ற டிரம்புக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஒரு மணி நெரம் தனது மனைவியுடன் அங்கு இருக்கும் டிரம்புக்கு சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 
ஆக்ராவில் குரங்குகள் மக்களூக்கு தொல்லை தரும் என்பதால், டிரம்ப் வருகையின்போது பிரச்சனை ஏற்படாத வகையில், சில நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  அதில் டிரம்புக்கு குரங்குகளால் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கவே பாதுக்காப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
டிரம்ப் அணிவகுப்பு வாகனம் செல்லும்போது, குரங்குகள் வந்தால், அதை விரட்டவும், அச்சுறுத்தல்கள் ஏற்படாமல் இருக்கவே 5 லாங்கூர் குரங்குகள் பாதுகாப்பு குழுவில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்