கர்நாடகாவில் ஜனதாதளத்திற்கு காங்கிரஸ் வைத்த செக்

Webdunia
செவ்வாய், 29 மே 2018 (07:29 IST)
ஜனதாதள கட்சியிடம் 30 மாதங்கள் முதலமைச்சர் பதவி தருமாறு காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது
கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவடைந்து பல குழப்பத்திற்கு பிறகு காங்கிரஸ் - மஜத கூட்டணி அமைத்து குமாரசாமி முதல்வராக பதவியேற்றார். அதன் பின்னர் தனது பெரும்பான்மையையும் நிரூபித்தார். 
 
இதையடுத்து, மொத்தம் உள்ள 34 மந்திரி பதவிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 22, மதசார்பற்ற ஜனதாதள கட்சிக்கு 12 என்ற அளவில் பகிர்ந்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது.
 
காங்கிரஸ் கட்சிக்கு சபாநாயகர் பதவியும், துணை சபாநாயகர் பதவி மதசார்பற்ற ஜனதாதள கட்சிக்கும் என்று முடிவு செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், மந்திரிகள் யாரும் இன்னும் பதவி ஏற்கவில்லை. 
 
தற்போது மந்திரிசபை விரிவாக்கத்தில் பிரச்சினை எழுந்து உள்ளது என தெரிகிறது. அதாவது முக்கிய இலாகாக்களை இரண்டு கட்சிகளுமே கேட்பதால் பிரச்சினை எழுந்து உள்ளது.
 
இந்நிலையில் காங்கிரஸ் 30 மாதங்கள் முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்கும்படியும், 20 மாதங்களுக்கு ஒரு முறை மந்திரிசபையை மாற்றி அமைக்க வேண்டியும் ஜனதா தளத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.
 
ஆனால் குமாரசாமி முதலமைச்சர் பதவியை விட்டு கொடுக்க மறுத்து விட்டதாகவும், மந்திரிசபை 20 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றி அமைக்க அவர் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்