நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு வெற்றி

வெள்ளி, 25 மே 2018 (15:51 IST)
கர்நாடக முதல்வராக கடந்த புதன்கிழமை பதவியேற்ற மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி இன்று சட்டமன்றத்தில் தனது அரசுக்கான நம்பிக்கை வாக்கெடுப்பை கோரினார்.
 
இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல், கர்நாடக சட்டப்பேரவையில் இருந்து பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இருப்பினும் கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் குமாரசாமி அரசு வெற்றி பெற்றது. இந்த  வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக 117 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். பாஜக எம்.எல்.ஏக்கள் அனைவரும் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்ததால் அரசை எதிர்த்து ஒருவர் கூட வாக்களிக்கவில்லை. எனவே குமாரசாமி அரசுக்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது.
 
குமாரசாமியின் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் 111 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தாலே போதும் என்ற நிலையில் 6 எம்.எல்.ஏக்கள் அதிகமாக மொத்தம் 117 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இருப்பினும் இந்த ஒற்றுமை ஐந்து வருடங்களுக்கு நீடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்