மக்களவையை அடுத்து மாநிலங்களைவையிலும் குடியுரிமை சட்டதிருத்தம் வெற்றி!

Webdunia
வியாழன், 12 டிசம்பர் 2019 (07:06 IST)
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்ட மசோதா கடந்த திங்களன்று மக்களவையில் வெற்றிகரமாக நிறைவேறியது. இந்த மசோதாவிற்கு 300 எம்பிக்களுக்கு மேல் ஆதரவும் 80 எம்பிக்கள் மட்டும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இந்த மசோதா மக்களவையில் வெற்றிகரமாக நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது 
 
மக்களவையில் வெற்றிகரமாக நிறைவேறிய இந்த மசோதா நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மாநிலங்களவையிலும் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால் இந்த மசோதா நிறைவேறி விடும் என்றே கணிக்கப்பட்டது
 
அதன்படி இந்த மசோதாவுக்கு ஆதரவாக 117 வாக்குகளும் எதிர்த்து 92 வாக்குகள் பதிவானது. இதனை அடுத்து இந்த மசோதா மாநிலங்களவையிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது
 
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் வெற்றி பெற்றதை அடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்றும் அவரது ஒப்புதல் கிடைத்த பின்னர் இந்த சட்டம் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்