அசாமில் போராட்டம் உச்சக்கட்டம்! – இராணுவம் குவிப்பு: இணைய சேவை முடக்கம்!

புதன், 11 டிசம்பர் 2019 (17:54 IST)
இந்திய குடியுரிமை சட்ட மசோதாவுக்கு எதிராக அசாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்தியாவில் தங்கியிருப்போருக்கான குடியுரிமை வழங்குவது உள்ளிட்டவற்றை உறுதி செய்யும் குடியுரிமை மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவில் இஸ்லாமியர்கள் மற்றும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்த எந்த அறிவிப்பும் இல்லாததால் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன்.

இருப்பினும் மக்களவையில் பெரும்பான்மை கொண்ட பாஜக அரசு இந்த மசோதாவை நிறைவேற்றி, இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்தது. இந்நிலையில் குடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் மாநில மக்கள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர். தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட தொடங்கி இருப்பதால் அசாமில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

மேலும் போராட்டம் பெருமளவில் பரவாமல் இருக்க இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. அமைதியாக இருந்த அசாமை பாஜக அரசு பெரும் இக்கட்டான நிலைக்கு உள்ளாக்கி விட்டதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Massive protests against CAB across Assam with this one at Sivasagar in the Brahmaputra valley. In Guwahati too, thousands are out on the streets.

There are reports of the army being deployed. It took decades for Assam to become peaceful & BJP is putting that at a huge risk. pic.twitter.com/UHLdBgZTJA

— Srivatsa (@srivatsayb) December 11, 2019

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்