நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குடியுரிமை சட்ட மசோதா தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பலர் பேசி வரும் நிலையில் எதிராக பலர் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். நேற்று மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது எதிர்க்கட்சிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டன. அசாமில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மிகப்பெரும் போராட்டம் வெடித்துள்ளது.
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் மௌனமாய் இருப்பதை விமர்சித்துள்ள நடிகர் சித்தார்த் இதற்கு ஆதரவளிப்பதன் மூலம் அவரது உண்மையான எண்ணங்கள் நன்றாக தெரிகிறது. ஒருவேளை ஜெயலலிதா தற்போது இருந்திருந்தால் ஒருபோதும் இதற்கு சம்மதித்திருக்க மாட்டார். ஆனால் அதிமுக அவரது சிந்தனைகளை, நோக்கங்களை கைவிட்டு விட்டது என்று தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.