ராகுல் காந்தியுடன் சந்திரபாபு நாயுடு திடீர் சந்திப்பு: கூட்டணி பேச்சுவார்த்தையா?

Webdunia
புதன், 31 அக்டோபர் 2018 (22:14 IST)
மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜகவை வரும் பாராளுமன்ற தேர்தலில் தோற்கடிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என கடந்த சில மாதங்களாக அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர். குறிப்பாக காங்கிரஸ் தலைமையில் மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.

இந்த நிலையில் தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் நாளை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தேசிய அளவில் பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி அமைப்பதால் பாஜகவுக்கு சாதகமாகிவிடும் என்பதால் அரசியல் தலைவர்கள் காங்கிரஸ் தலைமையில் ஒன்றிணையவுள்ளதாகவும், அதன் ஆரம்பமே இந்த சந்திப்பு என்றும் கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்