கனடாவில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கவும்: மத்திய அரசு அறிவுறுத்தல்..!

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2023 (15:27 IST)
கனடாவில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  
 
கனடாவில் உள்ள இந்திய தூதர் சமீபத்தில் வெளியேற்றப்பட்ட நிலையில் அதற்கு பதிலடியாக இந்தியாவில் உள்ள கனடா தூதர் வெளியேற உத்தரவிடப்பட்டது. 
 
இந்த நிலையில் இந்தியா கனடா இடையே தற்போது உறவு சமூகமாக இல்லை என்பதால்  கனடாவில் வசிக்கும் இந்தியர்கள், இந்தியாவிலிருந்து கனடாவுக்கு படிக்கச் சென்ற மாணவர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகள் கனடாவில் அதிகரித்து உள்ளதாக உள்ளதால் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்