தேவைப்பட்டால் உள்ளூர் ஊரடங்கு! – மாநில அரசுகளுக்கு பரிந்துரை!

Webdunia
திங்கள், 27 டிசம்பர் 2021 (14:47 IST)
இந்தியாவில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் உள்ளூர் ஊரடங்கு போன்றவற்றை அமல்படுத்த மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.

உலகம் முழுவதும் ஒமிக்ரான் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியாவிலும் மொத்த பாதிப்புகள் 500 ஐ தாண்டியுள்ளன. இதனால் மாநில அரசுகள் ஒமிக்ரான் பரவலை தடுக்க வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளை தனிமைப்படுத்தி பரிசோதித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் ஜனவரி 31 வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் ஒமிக்ரான் பாதிப்பை குறைக்க தேவையான நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ளவும், தேவைப்பட்டால் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் பகுதி நேர ஊரடங்கு அல்லது உள்ளூர் முழு ஊரடங்கு போன்றவற்றை அமல்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்