4 மடங்காக உயர்ந்த பாதிப்பு: ஆபத்தில் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள்?

திங்கள், 27 டிசம்பர் 2021 (10:23 IST)
5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்படுவது 4 மடங்காக அதிகரித்து காணப்படுகிறது என தெரிய வந்துள்ளது. 

 
தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவியுள்ள ஒமிக்ரான் வேரியண்ட் உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் ஒமிக்ரான் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி அமெரிக்காவில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு 1,90,000 ஆக உள்ளது. 
 
இந்நிலையில் அமெரிக்காவில் ஒமிக்ரான் அச்சத்துக்கு இடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 4 மடங்காக அதிகரித்துள்ளது என தெரிய வந்துள்ளது. ஆம், கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி முதல் தற்போது வரை 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் தொற்றால் பாதிக்கப்படுவது 4 மடங்காக அதிகரித்து காணப்படுகிறது.
 
மொத்த பாதிப்பில் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் எண்ணிக்கை பாதியளவுக்கு இருப்பதால் சுகாதாரத்துறையினர் கலக்கம் அடைந்துள்ளனர். இந்த வயது பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி இல்லாத நிலையில் மேலும் பரவலை தடுக்க என்ன செய்ய வேண்டும் என ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்