ஆஸ்திரேலியாவில் முதல் ஒமிக்ரான் பலி: 80 வயது முதியவர் மரணம்!

திங்கள், 27 டிசம்பர் 2021 (10:21 IST)
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் ஆஸ்திரேலியாவில் ஒமிக்ரான் வைரஸால் முதல் நபர் ஒருவர் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த நவம்பர் மாதத்திலிருந்து இந்தியா உள்பட உலகம் முழுவதும் மிக மிக வேகமாக ஒமிக்ரான் பரவி வருகிறது என்பதும் இந்தியாவில் சுமார் 500 பேர்கள் வரை ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களாக ஒமிக்ரான் வைரஸ் பரவி வரும் நிலையில் அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று காரணமாக ஆஸ்திரேலியாவின் சிட்னி சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவர் சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சற்று முன் உயிரிழந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஏற்கனவே இங்கிலாந்து அமெரிக்கா உள்பட ஒருசில நாடுகளில் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்ட சிலர் பலியாகி இருக்கும் நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவிலும் முதலாவதாக ஒரு நபர் ஒமிக்ரான் வைரசால் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்