அரசு ஊழியர்கள் CHATGPT, DeepSeek உள்ளிட்ட ஏ.ஐ. டெக்னாலஜியை பயன்படுத்தக் கூடாது என மத்திய நிதி அமைச்சகம் தடை விதித்துள்ளது.
உலக அளவில் அனைத்து துறைகளிலும் ஏஐ தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், அமெரிக்க நிறுவனமான ஓபன் ஏ.ஐ. உருவாக்கிய CHATGPT முன்னணி இடத்தில் இருந்தது. ஆனால் திடீரென சீனாவின் DeepSeek என்ற ஏ.ஐ. அறிமுகமாகி, ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், CHATGPT, DeepSeek உள்ளிட்ட ஏ.ஐ. தொழில்நுட்பங்களை அலுவலக பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய நிதித்துறை அமைச்சகம் தங்கள் ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அரசின் பாதுகாக்கப்பட்ட டேட்டாக்கள், ஆவணங்கள் ஆகியவை இதன் மூலம் லீக் ஆகும் அபாயம் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஆஸ்திரேலியா, இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் DeepSeek பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவில் எந்த ஒரு ஏ.ஐ. தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தக் கூடாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.