நம்மவர் கமல், மாஸ்டர் விஜய் வரிசையில் இணையும் சிம்பு!... சிம்பு 49 படம் பற்றி வெளியான தகவல்!

vinoth

புதன், 5 பிப்ரவரி 2025 (09:57 IST)
சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘பத்து தல’ . அந்த படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை. அதன் பின்னர் அவர் கமல்ஹாசனோடு இணைந்து மணிரத்னம் இயக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கவுள்ள மூன்று படங்களின் அறிவிப்புகள் வெளியாகின. சிம்பு – ராம்குமார் பாலகிருஷ்னன் இயக்கத்தில் உருவாகும் அவரது 49 ஆவது படம், சிம்பு- தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் அவரது 50 ஆவது படம் மற்றும் சிம்பு –அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் அவரது 51 ஆவது படம் என மூன்று அறிவிப்புகள் வெளியாகின.

இதில் முதல்படமாக சிம்பு- ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் படம் தொடங்கப்படவுள்ளது. இந்த படத்தில் சிம்பு கல்லூரி பேராசிரியராக நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. போஸ்டரில் கூட அவர் ஆக்ரோஷமான ஒருவராகதான் சித்தரிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்