வங்கிகளிடமிருந்து ரூ.6000 கோடி கடன் வாங்கிய நிலையில், 14 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிகள் தன்னிடமிருந்து வசூல் செய்துள்ளதாக பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் விஜய் மல்லையா மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார். அந்த மனுவில், அவர் வாங்கிய மொத்த கடன் 6000 கோடி என்றும், ஆனால் வங்கிகள் தன்னிடமிருந்து சொத்துக்களை விட்டு 14 ஆயிரம் கோடி உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடனை இரு மடங்குக்கு மேல் வசூல் செய்த பின்னரும், தன்னை ஒரு பொருளாதார குற்றவாளி என்று கூறுவதாகவும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார். கடன் வசூல் அதிகாரி 10 ஆயிரத்து 600 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதா என்று கூறியுள்ளதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
வசூலிக்கப்பட்ட கடன் தொகை குறித்து அறிக்கையை தனக்கு வழங்குவதற்கு, வங்கிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கோரிக்கை தெரிவித்துள்ளார். இந்த மனுவை கர்நாடகா உயர்நீதிமன்றம் விசாரணை செய்த நிலையில், வங்கிகள் மற்றும் கடன் வசூல் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு, தொழிலதிபர் விஜய் மல்லையா வங்கிகளில் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாமல், வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார். அதன் பின்னர், அவரது சொத்துக்கள் ஜப்தி செய்யப்பட்டு, கடன் வசூல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.