கொரோனா பாதிப்பில் இருக்கும் மாநிலங்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு நிதியுதவி வழங்கி வரும் நிலையில் தமிழகத்திற்கு 2020-21 ஆம் ஆண்டிற்கு ரூ.335 கோடி தவணை நிதியாக மத்திய அரசு விடுவித்தது. இந்த தகவலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தை போலவே மொத்தம் 14 மாநிலங்களில் கொரோனா தடுப்பு பணிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 15வது நிதிக்குழு பரிந்துரைப்படி 14 மாநிலங்களுக்கு மொத்தம் ரூ. 6,195 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது