ஓட்டல்களில் இட்லி சாப்பிட்டால் புற்றுநோய் வரும் அபாயம்!? - அமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு..!

Mahendran
வெள்ளி, 28 பிப்ரவரி 2025 (10:08 IST)
ஹோட்டல்களில் விற்பனை செய்யப்படும் இட்லி சாப்பிடுவது புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும் என்பதை ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது. இதன் பேரில் கர்நாடக மாநில அமைச்சர் உடனடி உத்தரவை பிறப்பித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
 
வீட்டுகளில், இட்லி அடுப்பில் வேகும் போது துணி பயன்படுத்துவது வழக்கமாகும். ஆனால், பல ஹோட்டல்களில் துணிக்குப் பதிலாக பாலிதீன் பயன்படுத்தப்படுவதாக தெரியவந்துள்ளது. இந்த பாலிதீன் பைகளில் உள்ள வேதிப்பொருள்கள், வேகவைக்கும் போது இட்லியில் கலந்து, அதை சுகாதாரமற்றதாக்குவதோடு, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களை உருவாக்கும் என்ற புகார்கள் எழுந்துள்ளன.
 
இதனையடுத்து, கர்நாடக மாநில உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் 250 உணவகங்களில் இருந்து இட்லி மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினர். இந்த ஆய்வில், 51 உணவகங்களில் தயாரிக்கப்படும் இட்லிகளில் புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
 
இதற்கான முக்கிய காரணமாக, பாலிதீன் பைகளில் இட்லி மாவை ஊற்றி வேகவைப்பது கூறப்பட்டுள்ளது. இதனைத் தடுக்கும் வகையில், பாலிதீன் பயன்படுத்தி இட்லி தயாரிக்க முற்றிலும் தடை விதிக்கப்படும் என்று கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவு அறிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்