பஸ் லேட்டா வந்துச்சு மிஸ்.. மாணவனுக்காக போக்குவரத்து கழகம் எடுத்த முடிவு!

Webdunia
திங்கள், 11 ஜனவரி 2021 (11:49 IST)
ஒடிசாவில் பள்ளிக்கு செல்லும் அரசு பேருந்து தாமதமாக கிளம்புவது குறித்து மாணவன் ட்விட்டரில் அளித்த புகாரை ஏற்று பேருந்து நேரத்தை போக்குவரத்து கழகம் மாற்றியமைத்துள்ளது.

ஒடிசா மாநிலத்தில் புவனேஷ்வர் நகரத்தில் வாழ்ந்து வருபவர் சாய் அன்வேஷ். அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வரும் அன்வேஷ் தினமும் பள்ளி சென்று வர அரசு பேருந்தையே நம்பி வந்துள்ளார். இந்நிலையில் அவரது பள்ளிக்கு செல்லும் வழியில் செயல்படும் பேருந்து சேவை காலதாமதமாக தொடங்குவதால் பள்ளிக்கு நேரத்திற்கு செல்ல முடியாமல் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளார் அன்வேஷ்.

இந்நிலையில் இதுகுறித்து புவனேஷ்வர் மாநகர போக்குவரத்து கழகத்தை டேக் செய்து ட்விட்டரில் பதிவிட்டு மாணவர் அன்வேஷ் தனது பிரச்சினைகளை அதில் முறையிட்டுள்ளார்,. அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள போக்குவரத்து கழகம் மாணவர் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு செல்லும் வகையில் பேருந்தின் புறப்படும் நேரத்தை மாற்றியமைத்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்