வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலம்....சத்தீஸ்கரில் பரபரப்பு

Webdunia
வியாழன், 29 ஜூன் 2023 (13:37 IST)
பீகார் மாநிலத்தில் சமீபத்தில் ஒரு பாலம் இடிந்து விழுந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்திலும் ஒரு பாலம் விழுந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூஷேஷ் பாகல் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.  இங்குள்ள துர்க் மாவட்டத்தில் சிவ்நாத் ஆற்றில் கட்டுமானப் பணியில் உள்ள பாலம் இ இன்று திடீரென்று இடிந்து விழுந்துள்ளது.

இந்தப் பாலத்தின் கீழ் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால், வெள்ள நீர் அதிகரித்து ஓடியபோது, பாலத்தின் கட்டுமானத்தில் இருந்த பகுதி சரிந்துள்ளது.

16 கோடி ரூபாய் மதிப்பில் கட்டுப்பட்டு வந்த ஆற்றுப்பாலம் தொடர்மழையால் இன்று அடித்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்