ரூ.1710 கோடியில் கட்டப்பட்டு வரும் பாலம் இடிந்து விழுந்தது: பீகாரில் அதிர்ச்சி..!

திங்கள், 5 ஜூன் 2023 (08:18 IST)
பீகாரில் ரூபாய் 1710 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 
 
பீகார் மாநிலத்தில் உள்ள பாகல்பூர் மற்றும் ககாரியா ஆகிய இரண்டு மாவட்டங்களை இணைக்கும் வகையில் கங்கை நதியின் மீது கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்து விழுந்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 
 
இந்த பாலம் கலந்த 2014 ஆம் ஆண்டு பீகார் முதல்வர் நிதீஷ் குமாரால் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. மூன்று கிலோமீட்டர் நீளத்தில் 1710 ரூபாய் செலவில் 100 அடி உயரத்தில் நான்கு வழி பாதையாக செல்லும் வகையில் இந்த பாலம் திட்டமிடப்பட்டது. 
 
இந்த பாலம் கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாகவும் இடிந்து விழுந்து உள்ளதை அடுத்து முதல்வர் நிதிஷ் குமார் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளார்.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்